தோழர் அன்பு அவர்களின் தந்தையாருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!
Wednesday, May 9th, 2018
அமரர் சின்னையா இராசரத்தினத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியர்தர்கள் அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளனர்
தெல்லிப்பளையிலுள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றையதினம் சென்ற கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பூதவுடலுக்கு மலர்வளையம் சார்த்தி இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளனர்.
அமரர் சின்னையா இராசரத்தினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் வடக்கு பிரதேச நிர்வாக செயலாளரும் குறித்த பிரதேசத்தின் பிரதேச சபை உறுப்பினருமான தோழர் அன்பு (ஜெயபாலசிங்கம்) அவர்களின் தந்தையார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன், கட்சியின் சுன்னாகம் பிரதேச நிர்வாக செயலாளர் வலன்ரயன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts:
|
|
|


