தொழிற்துறைத் திணைக்களத்தின் மீது அதிகாரிகள் குற்றச்சாட்டு!
Thursday, December 13th, 2018
ஊழியர்களின் கொடுப்பனவுகளை செலுத்த முடியாமல் தொழிற்துறைத் திணைக்களம் நிதி நெருக்கடியில் உள்ளது என அரச சேவை தொழிலாளர் உத்தியோகத்தர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
முறையாக வழங்கவுள்ள பயண கொடுப்பனவுகளை விரைவாக செலுத்தப்படாவிட்டால், ஜனவரி மாதத்தில் தொழிலாளர்கள் தமது பணிகளில் இருந்து விலகி இருப்பதாக சங்கத்தின் தலைவர் ஐ.சி.கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் தொழில்துறை திணைக்களத்தில் வினவிய போது, தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் போன்று எந்தவித நிதி நெருக்கடியும் இல்லை என தொழில் ஆணையாளர் நாயகம் ஆர்.பீ.ஏ.விமலவீர தெரிவித்திருந்தார்.
நிலவும் முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய தற்போது நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
Related posts:
வேட்புமனு கோருவதற்கான நடவடிக்கை ஆரம்பம்!
சட்டவிரோதமாக இறக்குமதி : 1.2 கோடி ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!
வடக்கு - கிழக்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான அரசாங்கத்தின் இணைப்பாளராக கீத்நாத் காசிலிங்கம் நியம...
|
|
|


