தொழிநூட்ப உதவியுடன் முன்னோக்கிச் செல்லத் தயார் – ஜனாதிபதி தெரிவிப்பு!
 Monday, October 17th, 2016
        
                    Monday, October 17th, 2016
            
இரண்டு நாள் உத்தியோகபூர்வமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோவா நகரில் நடைபெற்ற பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டில் நேற்று கலந்துக் கொண்டிருந்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பிரகாரம் ஜனாதிபதி இந்த மாநாட்டில் கலந்துக் கொண்டிருந்தார். நவீன யுகத்தில் பயணிக்கும் போது பயன்படுத்தக்கூடிய பொறிமுறைகள் தொடர்பில் ஜனாதிபதி இதன்போது தெளிவுப்படுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் ஷமுதித சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக் கொண்ட அரச தலைவர்களுக்கும் பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துக் கொண்ட அரச தலைவர்களுக்கும் இடையில் வட்டமேசை கலந்துரையாடலொன்றும் நேற்று கோவாவில் நடைபெற்றுள்ளது.
இதன்போது வலயம் மற்றும் உலகளாவிய ரீதியில் சமாதானத்தை கட்டியெழுப்புதல் , பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் ஜனாநாயகத்தை கட்டியெழுப்புதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரைாயடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் முக்கிய அம்சமாக , சீன ஜனாதிபதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது இலங்கைக்கும் சீனாவாவிற்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கான சிறந்த சந்தர்ப்பம் இது என சீன ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கைக்கான அனைத்து உதவிகளையும் வழங்க தயார் என குறிப்பிட்டுள்ள அந்நாட் ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயமானது சிறப்பு வாய்ந்த விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        