தொலைபேசி ஊடாகவேனும் ஆசிரியர்களை வாழ்த்துங்கள் – கல்வி அமைச்சர் கோரிக்கை!
Friday, September 30th, 2016
சர்வதேச ஆசிரியர் தினத்தில் வாழ்த்துரைப்பது மிகவும் அவசியமானது எனவே தொலைபேசி ஊடாகவேனும் ஆசிரியர்களை வாழ்த்துமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஊடகங்களின் மூலம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
கல்விக் கண்ணை திறந்த ஆசிரிய தாய் தந்தையருக்கு பரிசுப் பொருட்கள் வழங்காவிட்டாலும் பரவாயில்லை தொலைபேசி அழைப்பின் ஊடாகவேனும் அனைத்து மக்களும் ஆசிரிய பெருந்தகைகளை வாழ்த்த வேண்டும்.
தற்பொழுது எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் சிறந்த நிலையில் இருந்தாலும் ஆசிரியர்கள் வழங்கிய ஆலோசனைகள் அறிவுறுத்தல்கள் வழிகாட்டல்களை மறந்துவிடக் கூடாது.தற்போது ஓய்வு பெற்றுக்கொண்டுள்ள ஆசிரியர்களின் தொலைபேசி இலக்கங்களை கண்டறிந்து அவர்களுக்கு தொலைபேசி ஊடகவேனும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.

Related posts:
கை விடப்படுமா காலி சர்வதேச மைதானம்!
பொலிஸ் உத்தியோகத்தரின் தாக்குதலில் மாணவனின் கால் முறிவு – வடமராட்சியில் சம்பவம்!
சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு: நாடு பாரிய பொருளாதார சவாலை எதிர்கொள்ள நேரிடும் - சுற்றுலாதுறை அம...
|
|
|


