தொற்றா நோய்களிலிருந்து அரச ஊழியரை காக்க நடவடிக்கை!

இலங்கையிலுள்ள சுமார் 14இலட்சம் அரச ஊழியர்களை தொற்றா நோயிலிருந்து பாதுகாக்க புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நீரிழிவு, புற்றுநோய், இருதயநோய், உயர் குருதி அமுக்கம் உள்ளிட்ட பல்வேறு தொற்றா நோய்களிலிருந்து அரச ஊழியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்தினவின் ஆலோசனையின் பேரில் இந்தத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயம் மருத்துவர் ஜயசுந்தரப பண்டார தெரிவித்திருக்கிறார்.
இந்தத்திட்டத்திற்கு முதற்கட்டத்தில் சுகாதார அமைச்சைச் சேர்ந்த சுமார் 1இலட்சத்து 40ஆயிரம் ஊழியர்கள் உள்வாங்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.
Related posts:
7 மாதத்தில் 154 யானைகள் பலி!
இரணைமடு பகுதி நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முழுமையாக கட்டியெழுப்பப்படும் – ஈ.பி.டி.பி...
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு!
|
|