தொடரும் சீரற்ற காலநிலை – 2004 ஆம் ஆண்டு காணப்பட்ட கிரக நிலை இந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதியும் காணப்படுகின்றது – ஜோதிடர்கள் எச்சரிக்கை!

Monday, December 18th, 2023

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடுமென அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை

எதிர்வரும் 26 ஆம் திகதி ஏற்படும் கிரக நிலையானது கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் இலங்கை எதிர்நோக்கிய பயங்கரமான சுனாமி நிலைமைக்கு இணையான இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய நிலைமையில் இருப்பதாக ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் இலங்கை எதிர்நோக்கிய சுனாமி அனர்த்தம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

அன்றையதினம் இலங்கையின் ஜாதகத்தின் படி சந்திரன் மிதுன ராசியில் சஞ்சரித்துக்கொண்டிருந்தார்.

நன்மை தரும் கிரகங்களான செவ்வாய், சுக்கிரன், புதன் மற்றும் புளூட்டோ ஆகிய கிரகங்களுடன் பத்தாம் வீட்டில் யோக ஸ்தானத்தில் இருந்தன.செவ்வாய் ராசியில் கேது சஞ்சரித்து வந்தார்.

மேற்கூறிய அன்றைய கிரக நிலைகளுடன் ஒப்பிடும் போது, ​​2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதியும் பௌர்ணமி தினமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிரக நிலைகளும் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி காணப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன.

இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இலங்கையில் நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை இன்னும் முடியவில்லை.

மத்திய மலைநாட்டில் அடிக்கடி மண்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.உலகில் வேறு நாடுகளிலும் பூகம்பங்கள் ஏற்பட்டு வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இதன் காரணமாகவே கடந்த 2004 ஆம் ஆண்டு காணப்பட்டது போன்ற கிரக நிலை இந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதியும் காணப்படுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜோதிடர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

தரிசு நெல் நிலங்களை பயிரிடும் தேசிய நிகழ்வு கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒருங்கிணைப்...
சிறைச்சாலையில் 65 வீதமானவர்கள் போதைப்பொருள் பாவனை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் - சிறைச்சாலை...
தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆராய்வதற்கு, அரசியல் அமைச்சரவை ஜனாதிபதியால் நியமனம்!