தொடரும் கனமழை காரணமாக மஸ்கெலியா பகுதியில் போக்குவரத்து துண்டிப்பு – மக்கள் தற்காலிக இடங்களில் தங்கவைப்பு!
Tuesday, May 19th, 2020
மஸ்கெலியா பகுதியில் இன்றையதிகதியன்று பெய்ய கனமழை காரணமாக அட்டன் மஸ்கெலியா நெடுஞ்சாலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை பகுதியில் பாரிய மண்திட்டு சரிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
குறிப்பாக சாமிமலை மஸ்கெலியா பிரதான பாதையின் சென்.ஜோசப் பாடசாலைக்கு அருகில் கழிவு நீர் செல்லும் கால்வாய் தாழ் இறங்கியுள்ளமையால் சம்பவ இடத்திற்கு உடன் மஸ்கெலியா பிரதேச சபை அதிகாரிகள் சென்று பாதுகாப்பு கருதி நடவடிக்கைகள் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும்,சாமிமலை ஓயாவுடன் காட்டாறு சங்கமிக்கும் பகுதியில் அதிகளவான நீர் வருவதால் கவுரவில 10இலக்க பகுதி,சாமிமலை கொலனி மற்றும் பாக்ரோ பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 10 இலக்கப்பகுதியில் தோட்ட ஆலயம் மற்றும் குடியிருப்பு பகுதியும் நீரில் மூழ்கியுள்ளது. இச்சம்பவ இடத்திற்கு மஸ்கெலியா பிரதேச சபை அதிகாரிகள், தோட்ட அதிகாரிகள் மற்றும் கிராம சேகவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களை அயலவர்கள் வீடுகளில் தங்க வைத்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
Related posts:
|
|
|


