தொடருந்து நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை பிற்போடப்பட்டது!

தொடருந்து நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நாளைவரை பிற்போடப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்று (26) நள்ளிரவுமுதல் அனைத்து விதமான செயற்பாடுகளிலிருந்தும் விலகி, தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்போவதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் முன்னர் அறிவித்திருந்தது.
இந்நிலையில், தொழிற்சங்க நடவடிக்கை நாளை (27) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேற்படி சங்கம் அறிவித்துள்ளது.
தொடருந்து திணைக்கள அதிகாரிகளுடன் நாளை இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் இறுதி அறிவிப்பு வெளியாகும் எனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் 25 பவுண் கொள்ளை!
ஐ.நாவில் ஞானசார தேரருக்கு எதிராக முறைப்பாடு!
எதிர்வரும் 30 ஆம் திகதி மின் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்க...
|
|