தொடருந்தில் மோதுண்டு சுன்னாகத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!

Thursday, October 10th, 2024

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் தொடருந்தில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது குருக்கள் கிணற்றடி வீதி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய கந்தையா இலங்கேஷ்வரன்  என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் ஒரு பிள்ளை கனடாவிலும், மற்றைய பிள்ளை இந்தியாவிலும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த நபர் நேற்று மாலை, சுன்னாகம் – மயிலனி பகுதியில் உள்ள தாயார் வீட்டுக்கு நடந்து சென்ற போது,

சுன்னாகம் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முற்பட்ட வேளை தொடருந்து மோதியதில் ஸ்தலத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

000

Related posts: