தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்துடன், உடனடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் கோரிக்கை!

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்துடன், உடனடி பேச்சுவார்த்தை நடத்த, கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் கோரியுள்ளது.
சனத்தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம்முதல் குடியிருப்புகளை பட்டியலிடும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த முழுமையான பணிகளுக்கு, சுமார் 3 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், குடித்தொகை கணக்கெடுப்புக்காக, தங்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு போதுமானதல்ல என இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அத்துல சீலமனாரச்சி தெரிவித்துள்ளார்.
2019 இல் அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவு மற்றும் வசதிகளே, தற்போதும் நடைமுறைப்பத்தப்படுப்படுவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|