தைப்பொங்கலுடன் வீடமைப்பு ஆரம்பம் – அமைச்சின் செயலர் சிவஞானசோதி அறிவிப்பு!

Tuesday, January 15th, 2019

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முதற்கட்டமாக 10 ஆயிரம் வீடுகளில் 4 ஆயிரத்து 750 வீடுகளை அமைக்கும் பணி தைப்பொங்கலுடன் ஆரம்பமாகவுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், மறுவாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழில் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் செயலர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

4 ஆயிரத்து 750 வீடுகள் அமைப்பதற்கான நிதி மாவட்டச் செயலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தைப்பொங்கலுடன் நாளை ஆரம்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வீடும் 10 இலட்சம் ரூபாவில் அமைக்கப்படும்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆயிரத்து 500 குடும்பங்களும் கிளிநொச்சியில் 670 வீடுகளும், முல்லைத்தீவில் 630 வீடுகளும் ,வவுனியாவில் 450 வீடுகளும், மன்னாரில் 350 வீடுகளும், மட்டக்களப்பில் 625 வீடுகளும், திருகோணமலையில் 400 வீடுகளும், அம்பாறையில் 125 வீடுகளும் அமைக்கப்படவுள்ளன.

பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பங்கள், காணாமல் ஆக்கப்பட்டோரைக் கொண்ட குடும்பங்கள், சமூகமயமாக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் குடும்பங்கள், வருமானம் குறைந்த குடிசைகளில் வாழும் குடும்பங்கள், கண்ணிவெடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், வயோதிபர்கள், இளம் சிறார்களைக் கொண்ட குடும்பங்கள் என்ற அடிப்படையில் பயனாளிகள் தெரிவு முன்னுரிமைப்படுத்தப்படும்.

இந்த வீடுகள் 550 சதுர அடி பரப்பளவில் பயனாளிகளால் கட்டப்படுகின்ற வீடுகளாகவும், செங்கல் மற்றும் சீமேந்திலான இரண்டு படுக்கை அறைகள், வரவேற்பறை, சமையலறை, மற்றும் கழிவறையை உள்ளடக்கியதாகவும் ஓட்டினால் ஆன கூரைகளாகவும் அமைவது கலாசாரத்துக்கு அமைவானதாகவும் காணப்படுகின்றன.

மாவட்டச் செயலர்கள் ஊடாகவும் பிரதேச செயலர்கள் ஊடாகவும் வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இவற்றிற்கான கொடுப்பனவுகள் கட்டம் கட்டமாக வேலைகளின் அடிப்படையில் பயனாளிகளுக்;கு வழங்கப்படும் என்றுள்ளது.

Related posts: