தேவையான அளவு அரிசி கையிருப்பில் – அரிசி இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம் – விவசாய அமைச்சர் அறிவிப்பு!
Tuesday, August 2nd, 2022
தேவையான அளவு அரிசி நாட்டில் உள்ளமையினால் அரிசி இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாய விதை இறக்குமதியாளர்கள் சங்கத்தினருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
எதிர்பார்த்தமையை விடவும் அதிக நெல் அறுவடை கிடைக்கிறது. இந்த போகம் நிறைவடையும் போது வெளிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு ஆலோசனை வழங்க முடியும். எதிர்காலத்தில் ஏற்படும் தேவைக்கு அமைய மாத்திரம் அரிசியை இறக்குமதி செய்ய முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
வட்டி வீதங்களை குறைக்க நடவடிக்கை - மத்திய வங்கி!
அரசாங்கம் சரியான தீர்மானத்தை எடுக்கும்போது அரச நிறுவனங்களும் அந்தக் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்ட...
பெப்ரவரி மாதத்திற்குள் மின்சாரத் தேவையை நிர்வகிக்க முடியும் - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்ப...
|
|
|


