தேர்தல் முறைமை மறுசீரமைப்புக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் செல்லுப்படியாகும் காலம் மேலும் நீடிப்பு!
Friday, December 10th, 2021
தேர்தல் முறைமையை மறுசீரமைப்பது தொடர்பான நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் காலம் அடுத்த வருடம் மார்ச் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
இத்தெரிவுக்குழுவின் தலைவரான சபை முதல்வர் அமைச்சர் தினேஸ் குணவர்தன அதன் காலத்தை நீடிப்பதற்காக நாடாளுமன்றில் முன்வைத்த யோசனைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த தெரிவுக்குழுவின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது.
வாக்கெடுப்பு சட்டங்களை மறுசீரமைத்தலை அடையாளப் படுத்துவதற்கும் அதற்கு தேவையான திருத்தங்களை முன்வைப்பதற்குமான பொறுப்பு, கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி நியமிக்கப்பட்ட குறித்த தெரிவுக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தரம் ஒன்று மாணவர்களை சேர்க்கும் சுற்று நிருபத்தில் திருத்தம்!
அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்திற்கு 1.5 பில்லியன் ரூபா இலாபம் - மீளாய்வுக் கூட்டத்தில் தெரிவிப்பு!
சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் மத அவதூறு தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க தனி பிரிவு – பதில் ...
|
|
|
2016-2017 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக விண்ணப்பதாரிகளின் விருப்பத் தெரிவுகளுக்கான முடிவுத் திகதி அறி...
பாடசாலை மாணவர்களுக்கு நாளைமுதல் தடுப்பூசி வழங்க நடவடிக்கை - சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அறிவி...
வடக்கின் சுகாதார சேவை உயர் பதவிகளுக்கு புதிய நியமனங்கள் - பணிப்பாளராக பி.எஸ்.டி.பத்திரண சுகாதார அமை...


