தேர்தல் நடத்தும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கே – பிரதீபா மஹாநாமஹேவா!
Friday, July 7th, 2017
மாகாணசபை ஒன்றின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் புதிய தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
பதவிக்காலம் முடிவடைந்த மாகாண சபையின் காலத்தை நீடிக்க வேண்டுமாயின் அரசமைப்பில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அரசமைப்பின் 154/இ பிரிவின்படி மாகாணசபைகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். அந்தக் காலத்தைத் தாண்டும் மாகாண சபைகள் கலைக்கப்பட்டதாகக் கருதப்படும். அதன்படி சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் பதவிக்காலம் ஒக்டோபர் முதலாம் திகதியுடன் நிறைவடைய உள்ளன. இதேவேளை தேர்தல் பிற்போடப்படுவது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்
Related posts:
|
|
|


