தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு – தேர்தல்கள் ஆணைக்குழு!

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக இதுவரையில் 3 ஆயிரத்து 684 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 04 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 168 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
எனினும் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இதுவரையில் பதிவாகவில்லை என்றும் அந்த ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2020 பொதுத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சீனவுக்கு இலங்கைக்கும் இடையில் சட்ட கட்டமைப்பை இலகுபடுத்த முயற்சி!
கொரோனா தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள் – துறைசார் அதிகாரிகளுக்க...
மிகவும் கடுமையான நேரங்களில் மட்டுமே பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் - சபையில் அமைச்சர் பீரி...
|
|