தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில்!
Tuesday, September 20th, 2022தேர்தல்கள் ஆணைகுழுவின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
யாழ் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இராஜேந்திரன் கிறிஸ்ரி அமல்ராஜ் தலைமையில் இடம்பெற்று வரும் குறித்த நிகழ்வில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்.ஜி.புஞ்சிஹேவா, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்
தேர்தல் ஆணையாளர் நாயகம் தேர்தல் ஆணைக்குழு சமன் ஸ்ரீ ரத்னநாயக்க, யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தினை பிரதிநிதிதுவபடுத்தும் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் சிவில் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், உள்ளிட்ட பலரும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
திடீரென முடங்கிய பேஸ்புக்! காரணத்தை என்ன!
புரவி புயலால் நிர்க்கதியாகி நிற்கும் வடக்கு கிழக்கு மக்களுக்கு ஈ.பி.டி.பியின் மனிதாபிமான பணிகள் தீவி...
மனித பாவனைக்கு ஏற்ற அரிசியில் விலங்குகளுக்கு தீவன உற்பத்தி  - அதிகாரிகள் சுற்றிவளைப்பு!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        