தேர்தல் ஆணைக்குழு நாளை விசேட சந்திப்பு: நாளைமறுதினம் தேர்தல் நடைபெறும் திகதி வெளிவர வாய்ப்பு!

Sunday, May 10th, 2020

தேர்தல் ஆணைக்குழு நாளையதினம் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நாளைய தினம் கூடி கலந்துரையாடல் ஒன்றை நடத்த உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பொதுத் தேர்தல் தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை, அனைத்து அரசியல் கட்சிகளினதும் பிரதிநிதிகளுடன் நாளைமறுதினம் 12 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு விசேட சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் தேர்தல் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: