தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாட்டினாலேயே தேர்தல் பிற்போடப்படுகின்றது – சுயாதீனநாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவிப்பு!
Thursday, November 17th, 2022
தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாட்டினாலேயே உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாமல் உள்ளதாக சுயாதீனநாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தேர்தல் ஆணைக்குழு இல்லாவிட்டால், தேர்தல் திணைக்களம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலகுவாக நடத்தியிருக்கும் எனவும் டிலான் பெரேரா தெரிவித்தார்.
சமன் ரத்னாநயக்க உள்ளிட்ட தேர்தல் திணைக்கள் அதிகாரிகளுக்கு, உள்ளுராட்சி தேர்தலை நடத்தும் அந்த அதிகாரத்தை எவரும் இல்லாது செய்யக்கூடாது என் கூறினார்.
மீறி, அவ்வாறு எவரேனும் செயற்படுவார்களாயின் நாம் நீதிமன்றின் ஊடாக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என குறிப்பிட்டார்.
Related posts:
வெளிநாட்டில் பிள்ளைகள் : தாயின் விபரீத முடிவு !
பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் ஆபத்து கிடையாது - உலக சுகாதார ஸ்தாபன நிபுணர் தெ...
இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்...
|
|
|


