தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சுகாதார அமைச்சும் தொடர்ந்து ஆய்வு!
Monday, May 25th, 2020
சுகாதார பாதுகாப்பு முறைகள் ஊடாக பொது தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சுகாதார அமைச்சும் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கு அமைய தேர்தலின் போது செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் இரு தரப்புக்களும் முன்வைத்துள்ள ஆலோசனைகள் சம்பந்தமாக கலந்துரையாடி வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சினால் இதற்கு முன்னர் அடிப்படை சுகாதார பாதுகாப்பு முறைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும் தேர்தலின் போது அஞ்சல் வாக்குகளை பயன்படுத்தல், வாக்களித்தல், வாக்குகளை எண்ணுதல் மற்றும் அதன் சுகாதார பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் வைத்திய பரிந்துரைகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்கழுவின் ஆலோசனைகள் சம்பந்தமாக இரு தரப்பினரும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|
|


