தேர்தல்கள் ஆணைக்குழுவில் மூன்று நாள் செயலமர்வு – பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு!

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ள மூன்று நாள் செயலமர்வில் பங்கேற்பதற்காக பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் தேர்தல்களில தேர்தல் செலவீன ஒழுங்குபடுத்தல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம் எல். ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு சர்வதேச நிபுணத்துவமுடைய ஒருவரின் ஒத்துழைப்பை பெறுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஓகஸ்ட் மாத முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
காரைநகர் கசூரினா கடற்கரைக்காக பயன்பாட்டு வரி ஈ.பி.டி.பியின் முயற்சியால் 50 வீதத்தினால் குறைப்பு!
அரச தேசிய புலனாய்வுத்துறை தலைவருக்கு பதவியுயர்வு!
நஷ்டமடையும் அரச நிறுவனங்களின் சுமையை மக்கள் மீது தொடர்ந்தும் சுமத்த முடியாது – அமைச்சர் ரஞ்சித் சியம...
|
|