தேர்தலைத் தள்ளிப்போடும் முயற்சிப்பதாக 5 கண்காணிப்பு அமைப்புக்கள் எதிர்ப்பு!

Sunday, September 24th, 2017

மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக மாகாண சபைத் தேர்தலை உரிய காலத்தில் நடத்தாது காலம் கடத்துவதற்கு அரசு முன்னெடுத்து வரும் முயற்சிகளை முறியடிப்பதற்கு தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புக்கள் ஐந்து கூட்டிணைந்து நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளன.

பவ்ரல் கபே’ தேர்தல் மோசடிகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையம், டிரானஸ்பெரன்சி இன்டர்நெசனல்’ மற்றும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பு நிறுவனம் என்பன இணைந்து இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளன.இது தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று தெமட்டகொடவில் நடைபெற்றது.

Related posts: