தேர்தலுக்கு பணம் வழங்குவது மத்திய வங்கியின் வேலையல்ல – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!
Thursday, January 26th, 2023
வரிகளை உயர்த்துவதற்கும் தேர்தலுக்கு பணம் வழங்குவதற்கும் நிதியமைச்சும் திறைசேரியும் முழுப்பொறுப்புடையவை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என தெரிவித்த அவர், நாட்டின் நிதிக் கொள்கையையே மத்திய வங்கி அமுல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
வரியை உயர்த்துவதும், தேர்தலுக்கு பணம் வழங்குவதும் நாடாளுமன்றம், அமைச்சரவை மற்றும் நிதி அமைச்சின் வேலை என்றும், நிதிக் கொள்கை உள்ளிட்ட வரிக் கொள்கையை அவர்கள்தான் செயற்படுத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மக்களின் நலன்களை முன்னிறுத்தியே செயற்பாடுகள் ஒவ்வொன்றும் முன்னெடுக்கப்படுகின்றன – வேலணை பிரதேச சபை த...
வவுச்சர்களுடன் வர்த்தக நிலையங்களில் மக்கள் முண்டியடிப்பு!
எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலை இலங்கை கடற்பரப்பில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை!
|
|
|


