தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளா் ஒருவருக்காக 523 ரூபா செலவு தோ்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் !

இன்று நடைபெறும் தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளா் ஒருவருக்காக 523 ரூபா செலவிடப்படுவதாக தோ்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் (சி.எம்.இ.வி) தெரிவித்துள்ளது.
இந்தத் தோ்தலுக்காக தேசிய தேர்தல் ஆணைக்குழு கிட்டத்தட்ட 8.5 பில்லியன் ரூபாக்களை செலவிடுகிறது. இலங்கை வரலாற்றில் அதிக செலவீனம் கொண்ட தோ்தலாக இது அமைந்துள்ளது.
பொதுத் தோ்தலில் வாக்களிக்க இம்முறை 16,263,885 வாக்காளா்கள் தகுதி பெற்றுள்ளனர். இவ்வாறு தகுதி பெற்ற ஒவ்வொரு வாக்காளா்களுக்கு வாக்களிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்த தலா 523 ரூபா வீதம் செலவாகியுள்ளதாக .எம்.இ.வி. கூறியுள்ளது.
அத்துடன் வாக்களிப்பு மூலமாகவும் தேசியப் பட்டியல் ஊடாகவும் தோ்தெடுக்கப்படும் 225 பிரதிநிதிகளுக்கு தலா 37,777,778 ரூபா செலவிடப்படும் எனவும் சி.எம்.இ.வி. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ரிக்கெட் இல்லாமல் பயணித்தால் 1000 ரூபா தண்டம்!
விசேட நிகழ்வுகளுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் - ஜனாதிபதி ஊடக பிரிவு!
2024 இற்குள் அனைவருக்கும் நீர் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் பிரதமர்.
|
|