பிரேஸிலிலிருந்து சீனி இறக்குமதியை நிறுத்த தீர்மானம்!

Tuesday, November 15th, 2016

பிரேஸிலிலிருந்து சீனி இறக்குமதி செய்வதனை நிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீனி இறக்குமதியாளர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.பிரேஸிலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நான்கு சீனி கொள்கலன்களிலிருந்து கொக்கேய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்தது.

இவ்வாறு போதைப் பொருள் மீட்கப்பட்ட சந்தர்ப்பங்களில் சீனி இறக்குமதியாளர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பிரேஸிலிலிருந்து சீனி இறக்குமதி செய்தவனை நிறுத்திக்கொள்ள இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

பிரேஸிலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 100 கொள்கலன்கள் சுங்கத் திணைக்களத்தில் தேங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்தும் இறக்குமதி செய்யப்பட்ட சீனி தேங்கிக் கிடந்தால் அவை பழுதடையக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரேஸிலிலிருந்து ஆண்டு ஒன்றுக்கு சுமார் 400 மில்லியன் டொலர்கள் பெறுமதியான சீனி இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் பாகிஸ்தான், உக்ரேய்ன், தாய்லாந்து, ஐரோப்பா போன்ற நாடுகளிலிருந்து சீனி இறக்குமதி செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

maxresdefault4

Related posts: