தேசிய மட்ட பரீட்சைகள் அனைத்திற்கும் பரீட்சார்த்திகளுக்கு ஒரே சுட்டெண் – பரீட்சைகள் திணைக்களம்!
Monday, December 18th, 2017
தேசிய மட்டத்தில் நடைபெறும் அனைத்து பரீட்சைகளுக்கும், பரீட்சார்த்தியொருவருக்கு ஒரே சுட்டெண்ணெ வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பரீட்சைகள் தொடர்பில் எழும் பிரச்சினைகளை குறைப்பதற்கும் முகமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தரப்பரீட்சை, உயர்தர பரீட்சைகளுக்காக, ஒரே சுட்டெண் வழங்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நியமிக்கப்பட்ட குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் முன்வைத்துள்ள பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு புதிய திட்டங்கள் நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
அமெரிக்கா புறப்பட்டார் ஜனாதிபதி.!
நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்ப...
கடன் மறுசீரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்வதன் மூலம் இலங்கையின் கடன் சுமையை 17 பில்லியன் அமெரி...
|
|
|


