தேசிய பெண்கள் ஆணைக்குழு உருவாக்க அரசாங்கம் முயற்சி!
Thursday, February 23rd, 2017
தேசிய பெண்கள் ஆணைக்குழு அமைப்பதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார அமைச்சரவைக்கு சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பெண்கள் தொடர்பில் செயற்படுவதற்கு பல அமைப்புக்கள் இருந்தபோதும் தற்போது பெண்களுக்கெதிராக அதிகரித்துவரும் வன்முறைகளை தடுப்பதற்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை. பெண்களுக்காக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதும், அவர்களை வலுவூட்டுவதும் இந்த தேசிய பெண்கள் ஆணைக்குழு அமைப்பதன் நோக்கமாகும்.
இலங்கை பெண்கள் பணியகமும், தேசிய பெண்கள் குழுவும் நாட்டில் இயங்கினாலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் போது தலையீடு செய்ய சட்ட ரீதியான ஏற்பாடுகள் இல்லாமையினால் இந்த ஆணைக்குழுவின் அவசியம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார அமைச்சரவைக்கு சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts:
|
|
|


