தேசிய பாதுகாப்பின் சவால்களை எதிர்கொள்ளும் முறைகள் பற்றி இராணுவத் தளபதி விளக்கம்!
Saturday, July 27th, 2019
இலங்கை சந்தைப்படுத்தல் கல்வி நிலையத்தின் ‘IGNITE – 2020 வருடாந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க வருகை தந்து அங்கு தேசிய பாதுகாப்பிற்கான பொருளாதாரத்தின் பங்களிப்பு தேசிய பாதுகாப்பு மற்றும் எதிர்கால பாதுகாப்பு எனும் தலைப்புகளை உள்ளடக்கி தமது உரையை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று (26) இடம்பெற்றதோடு, இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தைப்படுத்துபவர்கள் கலந்து கொண்டனர்.
இராணுவ தளபதி கருத்து தெரிவிக்கையில், தேசிய பாதுகாப்பு மற்றும் அவற்றிற்கான சவால்களை எதிர்கொள்கின்ற முறைகள் தொடர்பாகவும், நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டின் சமூகத்தின் பங்களிப்பு மேலும் பொருளாதாரத்திற்கான செயற்பாடு தொடர்பாகவும் விபரித்தார்.
Related posts:
சுன்னாகம் கைதி கொலை வழக்கு : நான்கு பொலிஸாருக்கு பிடியாணை!
அமைச்சர் விஜயதாஸ தொடர்பில் ஐ.தே.க. தீர்மானிக்கும் -அமைச்சர் சம்பிக்க
வெளிநாடுகளில் உள்ளவர்கள் உள்நாட்டில் லிட்ரோவை கொள்வனவு செய்ய வசதி - மொபைல் செயலியை அறிமுகம் செய்தது ...
|
|
|


