தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, February 5th, 2021

170 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை விரைவில் நிரப்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் தேசிய பாடசாலைகளின் அதிபர்களுக்கான நேர்முகத் தேர்வு இறுதிக் கட்டத்தில் உள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அதேநேரம் நேர்முகத் தேர்வுகளின் இறுதி பெயர்ப் பட்டியலை அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நாட்டில் 373 தேசிய பாடசாலைகள் காணப்படுகின்றன. அவற்றில் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படும் 100 பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்துள்ளரைம குறிப்பிடத்தக்கது.

Related posts:


வாக்களிக்கத் தகுதியிருந்தும் பதிவுகளை மேற்கொள்ளாமல் இருப்பவர்கள் உடனடியாக பதிவுசெய்ய வேண்டியது அவசிய...
வேட்பு மனு தாக்கலுடன் சொத்து விபரங்களையும் ஒப்படைக்கும் வகையில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்!
நிதிக் கோரி திறைசேரிக்கு மீண்டும் கடிதம் - வாக்குச்சீட்டு அச்சிடலுக்கு மேலும் 360 மில்லியன் அவசியம் ...