தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களின் கடமைகள் இன்று ஆரம்பம்!
Thursday, December 10th, 2020
புதிய உறுப்பினர்களுடனான தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமைகள் இன்றுமுதல் ஆரம்பமாகியுள்ளது.
இதன்படி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் உள்ளிட்ட ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் இன்று தமது கடமைகளை ஆரம்பித்துள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் புஞ்சிஹேவா நியமிக்கப்பட்டுள்ளார். M.M.மொஹமட், S.B.திவாரத்ன, K.P.பத்திரண மற்றும் ஜீவன் தியாகராஜா உள்ளிட்டோர் ஆணைக்குழுவின் ஏனைய .உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
20 ஆவது அரசியலமைப்பின் 41 A மற்றும் 103 முதலாம் சரத்தின் அடிப்படையில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழில் கர்ப்பிணிப்பெண்ணுக்கு நடந்த கொடூரம்!
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக 720 மில்லியன் ரூபா இடைக்கால இழப்பீடு !
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!
|
|
|


