தேசிய சிறுவர் தின வைபவம் – ஜனாதிபதி பிரதமர் தலைமையில் இன்று!
Monday, October 1st, 2018
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய சிறுவர் தின வைபவம் இன்று(01) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மகளீர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள் அமைச்சர் சந்திராணி பண்டாரவின் ஆலோசனைக்கு அமைய இந்த அமைச்சினால் இந்த வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“தன் முனைப்பாற்றலுடன் முன்னோக்கி செல்லுங்கள் ௲ சிறுவர் பருவத்திற்கு ஊக்கமளியுங்கள்” என்ற தொனிப்பொருளில் கீழ் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன், இந்த வைபவத்தில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு முத்திரையும் கடித உறையும் வெளியிடப்படவுள்ளது.
விசேட ஆற்றல்களை கொண்ட சிறுவர்கள் 9 பேருக்கும் மற்றும் சர்வதேச சிறுவர் தினத்திற்கான முத்திரைக்கான படத்தை தயாரித்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
|
|
|


