தேசிய சபையின் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணும் குழுவின் தலைவராக நாமல் நியமனம்!

Saturday, October 8th, 2022

தேசிய சபையின் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணும் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் நாமல் ராஜபக்ஷவின் பெயரை முன்மொழிந்துள்ளார், அதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆதரவளித்துள்ளார்.

இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் எம்.பி.க்கள், அரச கொள்கைகளை உருவாக்குவது குறித்து தங்களது யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்தனர்.

பொது நிர்வாகம், சுகாதாரக் கொள்கை, கல்விக் கொள்கைகள், மீன்பிடி மற்றும் உணவுக் கொள்கை, மின்சாரம் மற்றும் எரிசக்திக் கொள்கை, காலநிலை மாற்றக் கொள்கை, தொழில் முனைவோர் கொள்கை ஆகிய துறைகளில் நிபுணர்களை அழைத்து யோசனைகளைப் பெற கட்சியின் உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதன்படி, நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் குழுவின் உறுப்பினர்களால் குறுகிய கால முன்மொழிவுகளை ஒரு மாத காலத்திலும், நடுத்தர கால முன்மொழிவுகளை இரண்டு மாதங்களுக்குள்ளும் மற்றும் நீண்ட கால முன்மொழிவுகளை 03 மாதங்களுக்குள் உருவாக்கி சமர்ப்பிக்க பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: