தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான இறுதிச் சந்தர்ப்பம்!

Saturday, September 16th, 2017

 

நாட்டில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தொவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றுகையில் சுதந்திரத்தின் பின்னர் நாட்டில் நிலவிய தேசிய ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்புவதே  சமகால  நல்லாட்சி அரசாங்கத்தின் இலக்காகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி நாட்டின் தனித்துவத்தை பாதுகாத்து எதிர்கால பயணம் வெற்றிகரமாக மாற்றப்படும் மக்கள் இனவாதத்தில் இருந்து வலகியுள்ளார்கள்.நாட்டில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும் பயங்கரவாதம் பிரிவினைவாதம் என்பன  எதிர்காலம் அழிவை எதிர்நோக்கியதாகவும். இலங்கையை விட பின்னடைந்திருந்த நாடுகள் இன்று முன்னோக்கிச் சென்றுள்ளன .

நாட்டின் பொருளாதாரத்தை; எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்குள் வலுவானதாக மாற்றுவது அரசாங்கத்தின் இலக்காகும் என்றும்  பிரதமர் ரணில் விக்கிரம சிங்க  மேலும் தொவித்தார்.

 

 

Related posts: