தேங்கி கிடக்கும் கடிதங்கள் ஒரு நாளைக்குள் விநியோகிக்கப்படும்!
Friday, June 29th, 2018
அஞ்சல் சேவையாளர்கள் பல நாட்களாக மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பினால் தேங்கி கிடக்கும் கடிதங்களை ஒரு நாளைக்குள் விநியோகித்து முடிக்கப்படும் என ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளதாக அதன் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
அத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேங்கி கிடக்கும் வெளிநாட்டுக் கடிதங்கள் மற்றும் பொருட்களை விநியோகிக்க விசேட வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் சேவையாளர்கள் கடந்த 16 நாட்களாக முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு நேற்று முன்தினத்துடன் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
Related posts:
சயிட்டம் விவகாரம்: தீர்வு இன்றேல் தொழிற்சங்க போராட்டம்!
கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு 124 மில்லியன் ரூபா வருமானம் - இலங்கை சுங்கத் திணைக்களம்!
இலங்கை வருகின்றார் அமெரிக்க உதவி செயலாளர் எலிஸ் வேல்ஸ் !
|
|
|


