தெற்காசிய பிராந்திய புரிந்துணர்வு சங்கத்தின் மாநாடு கொழும்பில் ஆரம்பம்!

Wednesday, October 4th, 2017

தெற்காசிய பிராந்திய புரிந்துணர்வு சங்கத்தின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் 8ஆவது மாநாடு கொழும்பில் ஆரம்பமானது.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இது தொடர்பான ஆரம்ப வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பங்களிப்புடன் இன்று காலை 9.30 க்கு ஆரம்பமானது.

மாநாடு எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் சார்க் நாடுகளின் அரச தலைவர்கள் சபாநாயகர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெறும். இந்தியா, பாகிஸ்தான் ,பங்களாதேஷ் ,இலங்கை ,பூட்டார் ,நேபாளம், மாலைதீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி சபாநாயகர்கள் வெளிநாட்டு பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்கின்றனர்.

வறுமையிலிருந்து மீண்டும் தமது சமூகத்திற்காக சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு பெண்கள் பங்களிப்பு செய்வோம் என்ற தொனிப்பொருளின் கீழ் மகளீர் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமொன்றும்  இதன்பொது நடைபெறவுள்ளது.  சார்க் கொடியின் கீழ் இளைஞர் பாராளுமன்ற குழுவின் கூட்டமொன்றும் இம்முறை முதன்முறையாக  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: