தெரிவு செய்யப்பட்ட தபால் நிலையங்களில் வாகன தண்டப்பணத்தை செலுத்தும் வசதியை ஏற்படுத்த தபால் திணைக்களம் தீர்மானம்!
 Friday, January 19th, 2024
        
                    Friday, January 19th, 2024
            
நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட தபால் நிலையங்களில் வாகன தண்டப்பணத்தை செலுத்தும் வசதியை ஏற்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மேல்மாகாணத்தில் தற்போது இரவு பணிகளில் இயங்கும் தபால் நிலையங்களில் தண்டப்பணத்தை செலுத்தும் வசதி மேற்கொள்ளப்பட்டமையின் வெற்றியின் அடிப்படையில், ஏனைய மாகாணங்களிலும் இரவில் செயல்படும் தபால் நிலையங்களில் தண்டப்பணம் செலுத்த வசதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாத இறுதிக்குள் இதற்கான வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
வரலாற்று பிரசித்திபெற்ற சந்நிதி முருகன் திருவிழாவில் அன்னதானம் - காவடிக்கு முற்றாகத் தடை - சுகாதார ம...
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
எக்ஸ்பிரஸ் பேர்ல் இழப்பீடு வழக்கை விவாதிக்க குழு – அனுமதி வழங்கியது அமைச்சரவை!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        