தெரிவு செய்யப்பட்ட இடங்களில் மதுபான விற்பனைக்கு அனுமதி – மதுவரி திணைக்களம் தெரிவிப்பு!
Sunday, September 12th, 2021
தெரிவு செய்யப்பட்ட சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் விசேட அனுமதிப்பத்திரம் கொண்ட இடங்களில் மதுபான விற்பனைக்கு மதுவரி திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தெரிவுசெய்யப்பட்ட ஹோட்டல்களில் தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக மாத்திரமே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அந்தவகையில் தனிமைப்படுத்தல் காலப்பகுதியில் பயோ பபிள் முறைமையை பின்பற்றும் முதலாம் மற்றும் இரண்டாம் மட்டத்திலுள்ள ஹோட்டல்களில் மது பாவனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நவம்பர் 28 தேசிய உணவு பாதுகாப்பு வாரம் ஆரம்பம்!
வாகன அனுமதிப்பத்திரங்களை விற்பனை செய்த எம்.பிக்கள் தொடர்பில் விசாரணை!
அம்பாறையில் பதற்றம்: முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்!
|
|
|


