தென்மேற்கு பருவபெயர்ச்சி – காற்று அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
Sunday, September 3rd, 2023
தென்மேற்கு பருவபெயர்ச்சி மழை காரணமாக கடல் பிராந்தியங்களில் காற்று அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது
சில சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற் பிராந்தியங்களிலும் புத்தளம் முதல் மன்னார் ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்திரயங்களிலும் மணித்தியாலத்துக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும்.
குறித்த பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வடக்கின் மேம்பாடே எமது நோக்கம்!- யாழ். இந்திய துணைத்தூதுவர்
வேட்பாளர்களை தெரிவு செய்ய பின்பற்றவேண்டிய விடயங்கள்!
அபாய வலயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது சாத்தியமாகுமா? - வைத்திய நிபுணர்...
|
|
|


