தென்னைச் செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை!

போரின் பின்னர் மக்கள் மீள்குடியமர்ந்த பிரதேசங்களில் தென்னைப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் வகையில் மண் அணைகள், பற்றைக்காடுகளைத் துப்புரவாக்கும் நடவடிக்கையில் தென்மராட்சிப் பிரதேச சபை ஈடுபட்டுள்ளது.
அல்லாரை, மீசாலை வடக்கு, எழுதுமட்டுவாழ் வடக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் காணப்படும் மண் அணைகளையும், துணாவில் மேற்கு, மிருசுவில் தெற்கு, மாசேரி, கரம்பகம், எழுதுமட்டுவாழ் வடக்கு, தாவளை இயற்றாலை, உசன், மந்துவில் கிழக்கு, கோயிற்குடியிருப்பு, மண்டுவில், கல்வயல் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் காணப்படும் பற்றைக்காடுகளையும் சீராக்கும் பணிகள் நடைபெறுகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.
துப்புரவாக்கப்படும் இடங்களில் தென்னைச் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
எந்தவொரு மாணவருக்கும் சலுகை மறுக்கப்பட மாட்டாது - மஹாபொல திட்டம் குறித்துபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக...
ஜப்பான் தொழில் வாய்ப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைசாத்து!
மின்சார கட்டணத்தை 100 சதவீதத்தினால் அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி - அங்கீகாரம் வ...
|
|