தென்கொரிய வர்த்தக அமைச்சர் அடங்கிய குழுவினர் இலங்கை வருகை!

தென்கொரியாவின் வர்த்தக அமைச்சர் உள்ளிட்ட 25 பேர் அடங்கிய குழுவினர் நேற்றிரவு இலங்கை வந்தடைந்தனர்.
மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினூடாக முன்னெடுக்கப்படும் திட்டங்களில் முதலீடு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இந்த குழு நாட்டை வந்தடைந்துள்ளதாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கைத்தொழில், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் இவர்கள் முதலீடு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த முதலீட்டாளர்களுடன் இரண்டு நாட்கள் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.இந்த கலந்துரையாடலூடாக நாட்டிற்கு பாரிய அளவிலான நிதியை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
தரம் ஆறுக்கு சேர்ந்துகொள்ளும் மாணவர்களுக்கு ஊக்குவிப்புக்கள்!
எதிர்வரும் 18ஆம் திகதி பிரதமர் மஹிந்தராஜபக்ச தலைமையில் கட்டுநாயக்க சர்வதேச நிலையத்தில் இரண்டாவது முன...
ரத்வத்தை தோட்டத்தில் அடாவடியில் ஈடுபட்ட உதவி தோட்ட முகாமையாளர் பணி நீக்கம் - அமைச்சர் ஜீவன் தொண்டமான...
|
|
வரி அறவீடு அதிகரிக்கப்படுவதே பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வாக அமையும் - நிதி அமைச்சர் அலிசப்ரி ச...
பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி தீர்வு பெற்று தர முயல்வேன் - வடக்கு மாகாண ஆளுநர் பி எச் எம் சாள்ஸ் தெ...
அதிகாரிகள் மட்டக் குழுவின் இணக்கப்பாட்டுக்கு அங்கீகாரம் - இரண்டாவது தவணையாக இலங்கைக்கு 330 மில்லியன்...