தெகிவளையிலும் குண்டு வெடிப்பு சம்பவம்..!

Sunday, April 21st, 2019

தெஹிவளை குண்டு வெடிப்பில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு அருகில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

அந்த பகுதியில் இருந்து பாரிய சத்தம் ஒன்று கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இக்குண்டு வெடிப்பில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்று வரும் நிலையில் இந்தத் தாக்குதலும் இடம்பெற்றுள்ளது.

இதனால் மிருகக் காட்சிசாலையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்ததாகவும், தெஹிவளை- மிருகக் காட்சிசாலையின் பதில் பணிப்பாளர் தம்மிகா தெரிவித்துள்ளார்

Related posts:

கிராமிய விளையாட்டு மைதானங்களை புனரமைக்கும் தேசிய வேலைத்திட்டம் – மட்டக்களப்பில் அமைச்சர் நாமல் ஆராய்...
இன்றுமுதல் பெப்ரவரி 04 ஆம் திகதி வரை தினசரி மின்வெட்டு - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரை - கு...
வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு வசதியாக குற்றவியல் சட்டத்தில் முன்விசாரணை முறையை அறிமுகப்படுத்த நடவடி...