தூதரகங்களிற்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்த நீதிமன்றம் தடை உத்தரவு!
Tuesday, June 9th, 2020
கொழும்பிலுள்ள அமெரிக்க மற்றும் சீன தூதரகங்களிற்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஜோர்ஜ் புளொயிட்டின் கொலைக்கு எதிராக முன்னிலை சோசலிச கட்சி இன்று அமெரிக்க தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.
இந்தநிலையிலேயே நீதிமன்றத்தினால் இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கொழும்பில் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதிவரை நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கொரோனா வைரசினால் இலங்கை சந்தித்துள்ள பொருளாதார இழப்புகளிற்கு நஸ்டஈடு கோரி சீனா தூதரகத்திற்கு முன்பாக நாளைய தினம் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பத்திரிகைச் சுதந்திரத்தில் இலங்கை 131 ஆவது இடம் !
தீவுகளுக்கான போக்குவரத்து சேவை விரைவில் மேம்படுத்தப்படும் - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அ...
இலவச குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான நடமாடும் சேவை: பூநகரி மக்களுக்கு ஓர் அறிவிப்பு!
|
|
|


