துறைமுக ஒப்பந்தத்தினைத் திருத்த முடியும் – மகிந்த சமரசிங்க

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடா்பாக இலங்கை அரசாங்கத்திற்கும் சீன நிறுவனத்திற்கும் இடையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தினைத் தேவைப்படின் திருத்த முடியும் என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஹிக்கடுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
”இந்த உடன்படிக்கை மூலம் நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தினாலும் ஒப்பந்தத்தின் 50 வது பக்கத்தில் உள்ள பந்திக்கு அமைய இந்த ஒப்பந்தத்தினைத் தேவைக்கு அமைய திருத்த முடியும்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமையவே இந்த பந்தி சேர்க்கப்பட்டது. ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் இலங்கையில் ஒரு அடி நிலம் கூட எந்த நாட்டுக்கும் விற்பனை செய்யப்பட மாட்டாது” என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
சாரதி பயிற்சிப் பாடசாலைகளை கண்காணிக்க வேலைத் திட்டம்!
ரஞ்சன் ராமநாயக்க விவகாரம்: உயர்நீதிமன்ற நீதிபதி கிஹான் பணிநீக்கம்!
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்றுமுதல 16ஆம் திகதிவரை விசேட பேருந்து தொடருந்து சேவைகள் - இலங்கை ...
|
|
சிவில் சமூகம் - இராணுவம் இடையிலான உறவு மூலம் இலக்குகளை அடைய முடியும் - பாதுகாப்பு செயலாளர் கமல் குண...
நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் விசாரணை முடியும் வரை நடவடிக்கை எடுக்க வேண்டாம் - இராஜாங்க அமைச்சர்...
கட்டாய மத மாற்றத்துக்கு எதிராக கடுமையான சட்டம் - உதாசீனப்படுத்தினால் பாரிய விளைவுகள் ஏற்படும் என ஞான...