தீவுகளுக்கான போக்குவரத்து சேவை விரைவில் மேம்படுத்தப்படும் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம உறுதி!
Friday, March 26th, 2021
வடக்கிலுள்ள தீவுகளுக்கான போக்குவரத்து சேவையை மேம்படுத்த விரைவில் நடவடிக்கை எடுப்பதாக பயணிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
தீவகங்களில் தற்போது மிகப்பழைய பஸ்களே போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
புதிய பேருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவை கிடைத்தவுடன் அவற்றை தீவகங்களில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வடக்கில் போக்குவரத்திற்கான குழுவை விரைவில் ஸ்தாபித்து, அதற்கு தேவையான வசதிகளையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம் வட மாகாணத்தில் பாடசாலை போக்குவரத்து சேவையில் பற்றாக்குறை நிலவுவதாகவும் கஷ்டப் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கான போக்குவரத்து சேவையை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


