தீவிரமடையும் கொரோனா – இலங்கையில் 20 நாட்களின் பின்னர் அடையாளம் காணப்பட்ட நோயாளி!

Thursday, April 9th, 2020

கொரோனா வைரஸ் உடம்பிற்குள் நுழைந்த பின்னர் நோய் அறிகுறிகள் ஏற்பட 10 நாட்கள் ஆகும் என ஆரம்பத்தில் கூறப்பட்ட போதிலும் தற்போது அது மாற்றமடைந்துள்ளது. அத்துடன் சிலருக்கு 20 நாட்களின் பின்னரே குறித்த நோய் அறிகுளிகள் வெளிப்படுவதாக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.

இதனால் தனிமைப்படுத்தப்படும் நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் மேலும் 14 நாட்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்தல் கட்டாயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் சான்றிதழ் பெற்று வெளியேறும் அனைவரும் மேலும் இரண்டு வாரங்கள் தனிமைப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய சந்தேகத்திற்குரிய எந்த நபராக இருந்தாலும் கட்டாயம் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் அக்கரைப்பற்றில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி, 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவராகும். 21 நாட்களின் பின்னரே அவருக்கு கொரோனா தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: