தீர்வு கிடைக்காத நிலையில் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கும் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்!

பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஒருநாள் சுகயீன அடையாள விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதுவரை தமது கோரிக்கைகளுக்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து உரிய தீர்வு வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஒரு சிலரின் அவசியமற்ற தீர்மானங்களினாலே இந்த நிலைமைக்குக் காரணம் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொது சுகாதார பரிசோதகர்களின் உண்மை யான பிரச்சினைகளைக் கண்டறிந்து தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமையத் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரேஸிலில் இருந்து வரும் சீனிக்குள் கொக்கெய்ன்!
பேச்சு சுதந்திரம் தேச துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் என நினைக்க வேண்டாம் - வடமாகாண ஆளுநர் தெரிவிப...
நிலையான சமாதானத்தை பேணும் வகையில் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை – ஜெனீவ...
|
|