தீர்வின்றேல் போராட்டம் தொடரும்!
Thursday, June 16th, 2016
தபால் திணைக்கள ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பில், கூட்டு தபால் தொழிற்சங்கங்கங்கள் ஒன்றியத்துக்கும் பிரதமரின் செயலாளருக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் ஊழியர்களுக்கு சாதகமான முடிவு எட்டப்படாவிட்டால் தொடர்ந்தும் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர் –
தபால் திணைக்கள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய அதிகாரிகள் தவறி விட்டனர். பிரதமர் செயலாளரின் தலைமையில் நடைபெறும் இன்றைய கலந்துரையாடலில் தபால் திணைக்கள ஊழியர்களுக்கு எவ்வாறான தீர்வை வழங்க முடியும் என்பது தொடர்பாக கலந்துரையாட உள்ளோம்.
மேலும் நாட்டின் பிரதான பல பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களில் இன்று பகல் 12 மணிவரை தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மேலும் தபால் சேவையில் கால தாமதங்கள் ஏற்படும். எனினும் ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Related posts:
டெங்கு நுளம்பை ஒழிக்க புகை விசுறுதல் கட்டாயம்!
பொருளாதாரத்தில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்த நாட்டில் தற்போதுள்ள முடக்க நிலை நீக்கப்பட வேண்டும் - ...
எரிபொருள் விநியோக ஒப்பந்தத்தில் சினோபெக் நிறுவனம் கைச்சாத்து!
|
|
|
நிர்ணயிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிகளவில் கட்டணத்தை வசூலிக்கும் பேருந்து நடத்துநர்கள் தொடர்ப...
தரமற்ற இம்யூனோகுளோபுலினை கொள்வனவு செய்த விவகாரம் - சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் மூத...
ஓய்வு பெறும் வயதெல்லை விவகாரம் - துரித தீர்மானங்களை எடுக்கத் தவறினால் பாரிய நெருக்கடியை எதிர்நோக்க ந...


