தீர்வின்றேல் போராட்டம் தொடரும்!
Thursday, June 16th, 2016
தபால் திணைக்கள ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பில், கூட்டு தபால் தொழிற்சங்கங்கங்கள் ஒன்றியத்துக்கும் பிரதமரின் செயலாளருக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் ஊழியர்களுக்கு சாதகமான முடிவு எட்டப்படாவிட்டால் தொடர்ந்தும் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர் –
தபால் திணைக்கள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய அதிகாரிகள் தவறி விட்டனர். பிரதமர் செயலாளரின் தலைமையில் நடைபெறும் இன்றைய கலந்துரையாடலில் தபால் திணைக்கள ஊழியர்களுக்கு எவ்வாறான தீர்வை வழங்க முடியும் என்பது தொடர்பாக கலந்துரையாட உள்ளோம்.
மேலும் நாட்டின் பிரதான பல பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களில் இன்று பகல் 12 மணிவரை தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மேலும் தபால் சேவையில் கால தாமதங்கள் ஏற்படும். எனினும் ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழில் புகையிரதத்துடன் மோதுண்டவர் உடல் சிதறிப் பலி!
மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு ஊடகக் கலாசாரத்தை உருவாக்குவது அவசியம் - வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப...
ஈ.பி.டி.பியின் நிலைப்பாட்டை உறுதி செய்தது அமெரிக்கா – குழப்பத்தில் தமிழ் தரப்பினர் என அதன் ஊடகப் பேச...
|
|
|


