திருமலையில் இந்திய கைத்தொழில் வலயம் -பிரதமர்!

Thursday, August 25th, 2016

திருகோணமலைத் துறைமுகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இந்திய கைத்தொழில் வலயம் அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்திய முதலீட்டாளர்களுடன் இதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றில் வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கும் வேளையில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது திருகோணமலைத் துறைமுகம் தொடர்பில் சிங்கப்பூர் நிறுவனத்துடன் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு அடுத்து பொலனறுவை பிரதேசம் தொடர்பாகவும் அரசு அதவானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். துறைமுக நடவடிக்கைகள், கப்பல்கள், சுற்றுலா வர்த்தகம் என்பவற்றுக்கு வலயங்கள் அமைக்கப்படுவது அவசியம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதே போன்று எண்ணெய் சுத்திகரிப்புக்கு என தனியாக வலயமும் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: