திருகோணமலை விமானப்படை தளத்திற்கு இந்திய விமானப்படை ஆதரவு – பிரதமரு;னான சந்தரிப்பில் இந்திய விமானப்படையின் விமானப்படைத் தளபதி தெரிவிப்பு!
Thursday, May 4th, 2023
இந்திய விமானப்படையின் விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரிக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு அளித்து வரும் இந்திய விமானப்படை தலைமை அதிகாரிக்கு பிரதமர் தனது நன்றியை தெரிவித்ததாக பிரதமரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இநநிலையில் இரு நாட்டு விமானப்படைகளுக்கு இடையே உள்ள நெருக்கமான ஒத்துழைப்பின் அடையாளமாக, திருகோணமலை விமானப்படை தளத்தில் நட்புறவு கேட்போர் கூடத்தை கட்டுவதற்கு இந்தியா முயற்சி செய்து வருவதாக எயார் மார்ஷல் சௌத்ரி பிரதமரிடம் அறிவித்துள்ளமை குறிர்ரிடத்தக்கது
000
Related posts:
தற்காலிகமாக கைவிடப்பட்டது ரயில் சாரதிகள் போராட்டம் !
கரவெட்டி கோவிற்சந்தைக்கான அடிக்கலை நாட்டிவைத்து பொது வர்த்தக வளாகத்தின் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்துவை...
எதிர்வரும் காலங்களில் புகையிரத பருவச்சீட்டை இரத்து செய்வதற்கு யோசனை - அதிகார சபையாக மாற்றப்பட்டால் ந...
|
|
|


