திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி!

Tuesday, January 4th, 2022

திருகோணமலை பெற்றோலியம் டெர்மினல் லிமிட்டெட் நிறுவனத்தினால் திருகோணமலை எண்ணெய் தாங்கி அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உதய கம்மன்பிலவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்திய அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள முத்தரப்பு ஒப்பந்தம் இராஜதந்திர ரீதியான கலந்துரையாடல் மூலம் மீளாய்வு செய்து கூட்டிணைந்த அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக நட வடிக்கைகளுக்காக 24 எண்ணெய்த் தாங்கிகளை ஒதுக்குவதற்கும், லங்கா ஐ.ஓ.சி கம் பனியால் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும்  எண்ணெய்த் தாங்கித் தொகுதியில் 14 தாங்கிகளைக் குறித்த கம் பனியின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக ஒதுக்குவதற்கும்,

எஞ்சிய 61 எண்ணெய்த் தாங்கிகளில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு 51% வீதமும், லங்கா ஐ.ஓ.சி கம்பனிக்கு 49% வீதமான பங்குரிமை கிடைக்கும் வகையில் ட்ரிங்கோ பெற்றோலி யம் டேர்மினல் (பிரைவேட்) லிமிட்டட் எனும் பெயரில் நிறுவப்பட்டுள்ள கம்பனியால் அபிவிருத்திக் கருத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: